புதன், அக்டோபர் 26, 2011

ஆயுதம் வேண்டும் ..!துணை யில்லா 
நேரம் வரு 
காமஞ் சில 

உண வில்லா
சீரும் பெரு
விலங்கு போல 

சீரு விலங்கை 
கொல்லுஞ் சிறு 
அம்பு போல 

வருங் காமங் 
கொல்ல வொரு 
ஆயுதம் வேண்டும் 

என் போல் 
இறை நேச 
நெஞ்ச மெல்லாம் 

ஈர மின்றி
உருமு போலதை
வீழ்த்த வேண்டும்


திங்கள், அக்டோபர் 17, 2011

அன்பு மனமே


ஆசையோடு பேசுகின்றாய் 
ஆறுதலை தேடுகின்றாய் 
ஆறுமனமே ஆறுஎன்று 
உனக்குநீயே பாடுகின்றாய் 

பாதிவரை வாழ்ந்துவிட்டாய்
வாழ்ந்தவரை லாபமில்லை 
மீதிவாழத்  துனிந்துவிடாய்
வாழத்துணை தேவையில்லை 

வந்தவரும் போனவரும்  
யாருமென் நினைவிலில்லை  
வருபவரும் இருப்பவரும் 
போய்விடுவார் பொய்யுமில்லை 

சொந்தமொன்றைத் தேடித்தேடி 
உன்னையேன் வாட்டுகின்றாய்
இருப்பதெல்லாம் போதாதென்று  
இன்னுமொன்றைத் தேடுகின்றாய் 

ஆசையோடு பேசுகின்றாய் 
ஆறுதலை தேடுகின்றாய் 
ஆறுமனமே ஆறுஎன்று 
உனக்குநீயே பாடுகின்றாய் வியாழன், அக்டோபர் 06, 2011

உன்னோடு பகிர்கிறேன்..!


அன்புள்ள BLOGGER..!

உன்னிடம் பகிர்வதில்
சுகமில்லை, உள்ளோடு
உண்டான சுமைகளையே
உன்னோடு பகிர்கிறேன்

உள்ளம்பீறி பொங்கிப்
பெருகும் உணர்வுக்கீறல்களை
குருதிச் சாயலாய்
உன்னோடு பகிர்கிறேன்

காரிருளைக் கொண்ட
ஒளிச்சேர்க்க மறந்த
நள்ளிரவோடு மட்டுமின்றி
உன்னோடும் பகிர்கிறேன்

காரணந்தெரயுமா உனக்கு?
எந் நகைச்சுவைக்கு
நகைக்க எதிர்வரும்மெவரும்
இமைபொழுதில் ஆயத்தப்படுவர்

உள்ளோடும் சினந்தன்னையும்
உருவான சிந்தனையையும்
உணர்வான கண்ணீரையும்
உணர்வோர் யாருமில்லை

ஒருமுறைக்கு இருமுறை
கேட்போர் யாருமில்லை
உணராதோர் காதிலுரைக்க
தன்மானம் விடுவதில்லை

என் னிறைவனோடும்
நள்ளிரவோடு மட்டுமின்றி
என் சுமையிறக்க
உன்னோடும் பகிர்கிறேன்

பதிவதனைத்தும் உலகுக்கின்றி
எனக்குநீ மீண்டுமுரைக்க
என்னிலொருவனாய் இருப்பதால்
உன்னோடு பகிர்கிறேன்

என்னுறவு, நட்பு, காதல்
எவருமெனை உணர்ந்தாரில்லை என்னை
யுணர்ந்தவனாய் நானுன்னை அறிவதால்
நான் உன்னோடு பகிர்கிறேன்

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

உணர்வுகள் ..!


மாற்றம் தேடும் மரபுகளை
மனிதம் சாகும் யுத்தங்களை


அடைய முடியா ஆசைகளை
ஆசை தோன்றும் தருணங்களை

உள்ள முடைக்கும் ஊடல்களை
உள் ளுணர்வுத் தேடல்களை

அமைதி அழிக்கும் உணர்வுகளை
உணர்வுகள் புரியா உறவுகளை


மாற்ற வேண்டும் எண்ணங்களால்
இருக்கும்? இரும்பு உள்ளங்களால்..!