வெள்ளி, மார்ச் 01, 2013

மங்கையர் தினம்..!


மார்ச் 8 மங்கையர் தினம்..!
ஒற்றைக் கவிதையில் எத்தனை எழுத?
உள்ளங் கொண்ட கவலை.!
எழுதத் தொடங்கிய பேனாவுக்கு 
உள்ளூர தொற்றிக் கொண்ட பயம்
மை தீர்ந்துவிடுமே என்று.!

பெண்மையின் மென்மை 
பேசிய பேனாக்களெல்லாம் 
பெண்ணின் பெருமை 
அவள் கொண்டதிறமை 
இவையென பட்டியலிட்டு 
பறைசாற்றும் காலமிது.! 

அன்னை ஆயிஷா, தெரசா, 
சரோஜினிநாயுடு, இந்திராகாந்தி 
யெல்லாம் பானைச் 
சோற்றின் ஒருபதம் - பானையளவு 
எவர் கணிப்பதும் உண்மையில் 
அளவில் அற்பமே ! 

துறைக்கொரு பெண்ணிருந்த 
காலம்போய் தூவிய மழையென 
துறைதோறும் அசத்தும் 
மங்கையர் ஆயிரமாயிரம் - இங்கே 
அரிசியல்போய் அரசியலும் 
செய்யும் பெண்ணினம்.! 

காதலுக்கு கணிக்கையில்லை நீ 
அடிப்படையை புரட்டிபோட 
புயலாய் வந்த புரட்சி, 
ஆணின் வெற்றிக்கு தேவை நீ 
ஓயாதுழைப்பதுன் பிறவிகுணம் 
உந்துதலின்றி பெறுவாய் வெற்றி