புதன், அக்டோபர் 29, 2014

என்னை அன்பு செய்பவளுக்கு..அகராதி தோற்றுப்போனது
விளங்கும்படி விளக்க 
அழகு இதுவென்று - உன் 
ஒற்றை புன்னகையை 
காணாத கண்களுக்கு...
உன் தாயும் வள்ளுவனே
உன் ஐந்தடிக்குள் - என்
அறம் பொருள் இன்பத்தை
பொதிந்ததினால்
செல்லக் குறும்புகளை 
மெல்ல ரசிக்கும் 
உள்ள மின்னுமிருப்பதை
உன்னால் உணர்கிறேன்
தமிழாழி ஆழம் 
மூழ்கிப் பார்கிறேன் 
உனையெழுத வார்த்தை
முத்தின்றித் தோற்கிறேன்
என்னில் புகுந்து
உன்னில் சிறைவைக்கிறாய்
நம்மில் நாமே
நம்மை தொலைக்கிறோம்
உன்னை எண்ணுகையில்
உள்ளம் துடிக்குதே
உன்னை மறந்தால்
உள்ளம் துடிதுடிக்குதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!