ஞாயிறு, டிசம்பர் 14, 2014

பெரியார் என்னதான் செய்துவிட்டார்?



பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

விவசாயி விதைத்த விதை
பொறியாளராய் விளைந்தபின் வினவுகிறான்!

என் மதத்தை இழித்ததைத்தவிர
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

சாஸ்திரங்களை பலித்ததை தவிர
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

வேத இதிகாசங்களை நகைத்ததைவிட
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

புராணம் புளுகு என்றதைத்தவிர
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

ஆம்! பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

இன்று கேள்வி கேட்பவரை - அன்று
கோயிலுக்குள் நுழைய செய்தார்

புத்தகம் ஏந்த செய்தார்
புதுஉலகம் காண செய்தார்

புத்திகெட்ட சூத்திர மாந்தராய்
ஒத்திருந்து மடியாதே என்றார்

வருத்தம் இதுவே! ஆரியமாயையில்
அடிமையாய் கிடந்தவன் இன்று மீண்டும்..

அட, பெரியார் என்னதான் செய்துவிட்டார்?
 உனக்கும் கேள்வி கேட்கும் உரிமை தந்தார்!


வெள்ளி, டிசம்பர் 05, 2014

எழுதி என்ன பயன்?

எழுதி என்ன பயன்?

எவரை அடைய வேண்டுமோ 
அவரை அடையா எழுத்தை
எழுதி என்ன பயன்?

எத்தனையோ பிழைகள் 
என்னோடும் என்ற பின் 
எழுதி என்ன பயன்?

 இன்னும் எத்தனை கேள்வி! 
இறுதியில் ஒன்றே ஒன்று,
எழுதி என்ன பயன்?

அத்தனையும் எழுதிய யாவரின் 

கேள்விகள், நினைவில் கொள் 
புள்ளியிலிருந்தே புத்தகம், 

பிளைகளிருந்தே பாடம்.

எழுத்தின் அவசியம் இருக்கிறது 
அன்றும், இன்றும், என்றும்

ஏற்பது காலத்தின் கைகளில்!
ஆம் எழுதி என்ன பயன்?
பயனைவிடு கடைமைசெய்...!